சாவடி வாரியான முடிவுகளில் ரகசியம் காக்க வேண்டும் என்ற ஆணைய பரிந்துரை நிராகரிப்பு

சாவடி வாரியான முடிவுகளில் ரகசியம் காக்க வேண்டும் என்ற ஆணைய பரிந்துரை நிராகரிப்பு
Updated on
1 min read

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக அதன் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும். அதனை அந்தந்த கட்சியைச் சேர்ந்த முகவர்கள் குறித்துக் கொள்வார்கள். இந்தச் சூழலில் வாக்குச்சாவடி வாரியான முடிவுகளில் ரகசியம் காப்பதற்காக வாக்கு எண்ணும் இயந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான பரிந்துரையை அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு ஆராய்ந்தது. எனினும் வாக்குச் சாவடி வாரியான வாக்கு எண் ணிக்கையில் ரகசியம் காக்கப்பட கூடாது என அமைச்சர்கள் குழு முடிவு எடுத்து, புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த அந்த இயந்திரம் (டோடலைசர்) மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு பதிவான வாக்குகளை மொத்தமாக தெரிவிக்கும். வாக்குச்சாவடி வாரியான வாக்கு எண்ணிக்கை அதில் தெரிவிக்கப்படாது. இதன் மூலம் தங்களுக்கு எதிராகவோ அல்லது சாதகமாகவோ எந்த வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகளால் கண்டுபிடிக்க முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in