ரூபாய் நோட்டு விவகாரம்: பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு

ரூபாய் நோட்டு விவகாரம்: பதில் அளிக்க ரிசர்வ் வங்கி மறுப்பு
Updated on
1 min read

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். மேலும் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை பழைய நோட்டுக்களை மாற்றி புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார். ஆனால் தற்போது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே மார்ச் 31-ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மார்ச் 31-ம் தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏன் அனுமதி வழங்கவில்லை என்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. ஆனால் இந்தக் கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதிலளிக்க மறுத்துள்ளது. மேலும் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி இந்த கேள்வி தகவல் என்ற வரையறையின் கீழ் வராது என்று விளக்கம் அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in