ஒரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்ட மசோதா: ஷிண்டே மறுப்பு

ஒரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்ட மசோதா: ஷிண்டே மறுப்பு
Updated on
1 min read

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்ட மசோதா இயற்றப்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை என மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ஓரினச் சேர்க்கை சட்டத்துக்கு விரோத குற்றம், இக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வரை வழங்க சட்டத்தில் வாய்ப்புள்ளது என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் சிங்வி, முகோபாத்யாயா தீர்ப்பு அளித்தனர்.

இத் தீர்ப்பு தங்கள் வாழ்வுரிமைக்கு எதிரானது என ஓரினச் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்திருந்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சோனியா காந்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது இப்போதைக்கு நடைபெறாது என மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இருப்பினும் தன் கட்சித் தலைவர், துணைத் தலைவர் நிலைப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in