

அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசுகிறார்.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அமெரிக்காவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதை ஏற்று பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு வரும் 26-ம் தேதி அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசுகிறார். எச்1பி விசா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிகிறது.