

நடப்பு 2016-17 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு (இபிஎப்) தொகைக்கான வட்டி விகிதம் 8.6 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இபிஎப் அமைப்பின் முடிவெடுக் கும் அதிகாரம் கொண்ட அமைப் பான அறக்கட்டளைகள் மத்திய வாரியம் (சிபிடி), நாடு முழுவதும் உள்ள சுமார் 5 கோடி சந்தாதாரர் களின் பிஎப் தொகைக்கான வட்டியை ஆண்டுதோறும் நிர்ண யிக்கிறது. இதற்கு அதன் ஆலோசனை அமைப்பான நிதி, தணிக்கை மற்றும் முதலீட்டுக் குழு மற்றும் மத்திய நிதியமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்த பிறகு, வட்டி தொகை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அதேநேரம், இபிஎப் அமைப் புக்கு கிடைக்கும் வருமானத்துக்கு அதிகமாக சந்தாதாரர்களுக்கு வட்டி வழங்கப்படவில்லை என உறுதி செய்தால் மட்டுமே நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கும்.
மேலும் அரசு சேமிப்புகள் மீதான வருமானம் குறைந்து வருவதால், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) உள்ளிட்ட அரசின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 8.6 சதவீதமாகக் குறைக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு நிகராக இபிஎப் வட்டியையும் குறைக்க வேண்டும் என இபிஎப் அமைப்பை நிதியமைச் சகம் வலியுறுத்துவதாகக் கூறப் படுகிறது. இதை இபிஎப் அமைப்பும் ஏற்கும் எனத் தெரிகிறது. கடந்த நிதியாண்டில், இபிஎப் தொகைக்கு 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.