

பிஹாரின் சஹர்சா மாவட்டத்தில் 6 குழந்தைகள் நேற்று குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகளை காணவில்லை.
இம்மாநிலத்தில் 4 நாள் ‘சத்’ பண்டிகை திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பண்டிகையின்போது, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகளை சுத்தம் செய்வது மக்களின் வழக்கம்.
இதன்படி பார்திநகர் என்ற இடத்தில் குளக்கரையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, இத்துயர சம்பவம் நேரிட்டது. இதில் உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பங்கஜ் சின்ஹா கூறினார்.