டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; ஒருவர் பலி

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; ஒருவர் பலி
Updated on
1 min read

டெல்லியின் நரேலா பகுதியில் இயங்கிவரும் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் ஒருவர் பலியானார்; மற்றொருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறும்போது, ''வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12.10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. உடனே 24 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

9 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே, தீ அணைக்கப்பட்டது'' என்றனர்.

காவல்துறை தரப்பில் கூறியதாவது: விபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள். தீ விபத்து பகல் நேரத்தில் நடந்திருந்தால் சேதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in