Last Updated : 10 May, 2017 02:53 PM

 

Published : 10 May 2017 02:53 PM
Last Updated : 10 May 2017 02:53 PM

பணமதிப்பு நீக்க முடிவு குறித்த தகவல்களைப் பகிர்வது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிக்கும்: ஆர்பிஐ

பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தீர்மானித்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிக்கும் என்று கூறி ஆர்டிஐ மனுதாரருக்கு தகவல் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்த ஆர்பிஐ, பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த முடிவை எடுக்கத் தூண்டிய விவரங்களை வெளியிடுவது நாட்டின் எதிர்கால நீக் கொள்கை, உள்ளிட்ட பொருளாதார நலன்களுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் ஆர்பிஐ-க்கும் இடையே நடைபெற்ற ஆவணப்பரிமாற்றங்களின் நகல்களை இந்த ஆர்டிஐ மனு கோரியிருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஆர்பிஐ, “பணமதிப்பு நீக்க அவசியம் குறித்த கருத்துகள், தரவுகள், முந்தைய ஆய்வுகள், கண்ணொட்டங்கள், ஆகியவை மிகவும் முக்கிய பின்னணி கொண்டவை. இந்த விவரங்களை வெளியிடுவது நாட்டின் பொருளாதார நலன்களுக்கு கேடு விளைவிப்பவையாகும், அதாவது பணமதிப்பு நீக்க நடவடிக்கை எந்த குறிக்கோளுக்காக செய்யப்பட்டதோ அது வீணாகி விடும்.

இந்தத் தகவல்களை அளிப்பது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படுத்தும்” என்று தனது பதிலில் கூறி ஆர்பிஐ மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x