Published : 04 Oct 2014 09:40 AM
Last Updated : 04 Oct 2014 09:40 AM

பாஜக தேர்தல் அறிக்கை: ஹரியாணாவில் கிலோ அரிசி ஒரு ரூபாய்

ஹரியாணா மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்காக ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று முன்தினம் ஹரியாணா மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில், ஏராளமான இலவச அறிவிப்புகள் உள்ளன.

ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி மற்றும் மருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், மூத்த குடிமக்களுக்கு புண்ணிய யாத்திரைகளில் இலவச பயணம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய அரசுகளின் கொள்கைகளும் ஹரியாணாவில் அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான அரசு உதவித்தொகையை, ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. வரும் 15-ம் தேதி ஹரியாணா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x