

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் 29-வது நாளாக நேற்றும் ஊரடங்கு அமலில் இருந் தபோதும், அனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாது காப்புப் படையினருக்கும் இடையே நேற்றும் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையில் 3 பேர் பலியான துடன் 150 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட் டது. எனினும், அனந்த்நாக் மாவட் டம் சீ கிராமத்தில் பிரிவினை வாதிகள் போராட்டத்தில் ஈடுபட் டனர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இங்கு நடந்த வன்முறை யில் 21 பேர் காயமடைந்தனர்.
இதுபோல, சோபியான் மாவட்டம் ஹெர்போராவில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவி ரவாதி புர்ஹான் வானி கடந்த மாதம் 8-ம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து பிரிவினைவாதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது.
இதனால் பாதுகாப்புப் படை யினருடன் ஏற்பட்ட மோதலில் இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள் ளனர். இந்தப் போராட்டம் காரணமாக, பள்ளி, கல்லூரி கள், வர்த்தக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள், வங்கிகள், தனியார் அலுவலகங்கள் மூடப் பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வருகை குறைவாக உள்ளது.வரும் 12-ம் தேதி வரை போராட்டம் தொடரும் என பிரிவினைவாதிகள் அறிவித் துள்ளனர்.