சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்து: ஹரியாணா முதல்வர் கத்தார், எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வருகை

சுற்றுச்சூழலை பாதிக்காத போக்குவரத்து: ஹரியாணா முதல்வர் கத்தார், எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வருகை
Updated on
1 min read

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்கு வரத்தைப் பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் மற்றும் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்தனர்.

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கத்தார் (62)தலை மையில் பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் போக்கு வரத்தை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்ட மாக முதல்வர் கத்தார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக் கள், சண்டிகரில் உள்ள சட்டப் பேரவைக்கு நேற்று சைக்கிளில் வந்தனர். இந்நிகழ்ச்சியில் மற்ற கட்சி எம்எல்ஏ.க்களும் பங்கேற்று சைக்கிளில் வந்தனர்.

முதல்வர் கத்தார் இல்லத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு அனைவரும் சைக்கிளில் வந்த னர். பெண் எம்எல்ஏ.க்கள் இ-ரிக் ஷாக்களில் பயணம் செய்த னர். பின்னர் செய்தியாளர்களிடம் கத்தார் கூறும்போது, ‘‘சுற்றுச் சூழலுக்கு உகந்த போக்குவரத்தை மக்கள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காக நாங்கள் சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்தோம்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘சைக்கிள் ஓட்டுவது உடல்நலத் துக்கு நல்லது மட்டுமல்ல. சுற்றுச்சூழலுக்கும் நல்லது என் பதை எடுத்துக்காட்டும் விதமாக சைக்கிள் பயணம் நடத்தப்பட்டது’’ என்றார்.

ஹரியாணா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அப்போது பாஜக எம்எல்ஏ பவன் குமார் சைனி அவரது சொந்த தொகுதியான குருஷேத்ராவில் இருந்து 110 கி.மீ. தூரம் சைக்கி ளில் பயணம் செய்து முதல் நாள் சட்டப்பேரவை நிகழ்ச்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று நடந்த சைக்கிள் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.

சைக்கிளில் சட்டப்பேரவைக்கு சென்ற ஹரியாணா முதல்வர் கத்தார், எம்எல்ஏக்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in