Published : 31 Oct 2014 09:11 AM
Last Updated : 31 Oct 2014 09:11 AM

முதல்வராக பட்னாவிஸ் இன்று பதவியேற்பு: மகாராஷ்டிராவில் முதன்முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; சிவசேனாவுக்கு அமைச்சரவையில் இடமில்லை

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக முதல்முறையாக ஆட்சியமைக் கிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்கிறார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத் துள்ள பாஜக, முதன்முறையாக அங்கு ஆட்சியமைக்கிறது. அக் கட்சியின் மாநிலத் தலைவரான 44 வயதுள்ள தேவேந்திர பட்னா விஸ் முதல்வராக பதவியேற்கிறார்.

மும்பை வான்கடே மைதானத் தில் இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

இன்று நடைபெறவுள்ள பதவி யேற்பு விழாவில் சிவசேனா தரப்பில் யாரும் அமைச்சர்களாக பதவியேற்கவில்லை.

இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பெருநிறு வனங்களின் தலைவர்கள், இந்தி திரைப்படத்துறை பிரபலங்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

அமைச்சரவை

10 பேர் கொண்ட சிறிய அமைச் சரவையும் முதல்கட்டமாக பொறுப்பேற்கிறது. ஏக்நாத் காத்சே, சுதிர் முங்கன்திவார், வினோத் தாவ்தே, பங்கஜ முண்டே உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாகப் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிய, திறன்மிகு அரசு நாளை பதவியேற்கும் என பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் சிவசேனா பங்கேற்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை. இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் சிவசேனா தரப்பில் யாரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க மாட்டார்கள் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறும்போது, “வெள்ளிக்கிழமை நடைபெறும் பதவியேற்பு விழா வில், சிவசேனா எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க மாட்டார்கள். சிவசேனாவுடனான பேச்சுவார்த்தை இணக்கமான சூழலில் நடைபெறுகிறது. ஆனால், அதற்கான முடிவு நாளை தெரிவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “மகாராஷ்டிர நலனைக் கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவு தரும் எந்தவொரு கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதம் எதுவும் ஆளுநரிடம் சமர்ப்பிக்க வில்லை. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சிய மைக்க உரிமை கோரியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

சிறுபான்மை அரசு

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 288 இடங்கள் உள்ள நிலையில் பாஜக 122 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதிலும், கோவிந்த் ராதோட் என்ற பாஜக எம்எல்ஏ இறந்து விட்டார். சிவசேனா கூட்டணியில் இடம் பெறாவிட்டால் பாஜக அரசு சிறு பான்மை அரசாகவே இருக்கும்.

41 எம்எல்ஏக்களைக் கொண் டுள்ள தேசியவாத காங்கிரஸ், வெளியிலிருந்து ஆதரவளிப்ப தாகத் தெரிவித்துள்ளது. நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அரசுக்கு எதிராக வாக்களிக்க மாட்டோம்.

ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், ஓரிரு இடங்களைக் கைப்பற்றியுள்ள சிறு கட்சிகள் சிலவும், சில சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிவசேனா பங்கேற்கவில்லை

இதனிடையே, பதவியேற்பு விழாவில் சிவசேனா எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என, அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ள தாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x