

இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் தசீன் அக்தர் என்ற மோனுவை டெல்லி போலீஸ் சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
தசீன் அக்தர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்துள்ள டெல்லி சிறப்பு போலீஸ் படை கமிஷனர் எஸ்.என்.வஸ்தவா, வேறு எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய கமாண்டரான வகாஸ் உள்ளிட்ட 4 பேர் ராஜஸ்தானில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தசீன் அக்தர் தலைமையில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு செயல்பட்டு வந்தது. இப்போது அவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்த தீவிரவாத அமைப்பின் அனைத்து முக்கியத் தலைவர்களும் சிக்கிவிட்டனர்.
தசீன் அக்தர், யாசின் பத்கல், வகாஸ் ஆகியோர்தான் இந்திய மண்ணில் முஜாகிதீன் பயங்கரவாத அமைப் பினர் நடத்திய அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக் கும் மூளையாக இருந்து செயல்பட்டனர்.
மக்களவைத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு தாக்கு தல்களை நடத்தவும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.