மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் வலியுறுத்தல்
Updated on
1 min read

மாற்றுத் திறனாளிகளுக்கு நாடு தழுவிய பொது அடையாள அட்டை (யுனிவெர்சல் ஐடென்டிட்டி கார்டு - யுஐசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான பயனாளிகளை விரைந்து அடையாளம் காணுமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண் டுள்ளது.

மாநில சமூக நலத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர் கள் மாநாடு டெல்லி, விக்யான் பவனில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பேசியதாவது:

பல்வேறு அரசுத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விரைவில் பொது அடையாள அட்டை வழங்க உள் ளோம். இதற்கான வடிவமைப்பை அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனம் செய் துள்ளது.

அடையாள அட்டை தொடர்பான அனைத்து முன்னேற் பாடுகளும் முடிந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காணும் பணியை மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு விரைவுபடுத்தினால் அடுத்த 1 அல்லது ஒன்றரை ஆண்டுக்குள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பொது அடையாள அட்டை வழங்கிவிடலாம்.

இந்த பொது அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப் படும். இந்தப் புள்ளி விவரங்கள் ஆன்லைனில் கிடைக்கும் என்பதால் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கடந்த 2014-15-ம் நிதியாண்டில் தொடங்கியுள்ளது. இவற்றின் பயன் களை தகுதியுடைய அனைத்து மாணவர்களும் பெறவேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இத்தகைய மாணவர் களை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகள் வரும் கல்வி யாண்டு முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை வினி யோகத்தில் தாமதம் மற்றும் பிற குறைபாடுகளை தவிர்க்க, பய னாளியின் வங்கிக் கணக்கில் தொகையை நேரடியாக செலுத்தும் திட்டத்தை எனது அமைச்சகம் பின்பற்றி வருகிறது.

இவ்வாறு தாவர் சந்த் கெலாட் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in