

‘சன்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா’ எனப்படும் முன்மாதிரி கிராமத் திட்டத்தை, 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக கிராமங்களை முன்னேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், மாநிலங்களவை உறுப்பினர்களும் கிராமங்களை தத்தெடுக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், ஒஸ்மானாபாத் மாவட்டத் தில் கடந்த சில ஆண்டுகளாக, வறட்சியால் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் டோன்ஜா கிராமத்தை சச்சின் தத்தெடுத்துள்ளார்.
கடந்த, 2011 கணக்கெடுப்பின் படி, டோன்ஜாவில் 582 குடும்பங்கள் உள்ளன. 1,508 ஆண்கள் மற்றும் 1,355 பெண்கள் உள்ளனர். கிராமத்தில் ஆறு வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை மட்டுமே 319-ஆக உள்ளது. கிராமத்தில், 72 சதவீதம் பேர் படிப்பறிவுள்ளவர்கள். ஆண்களில் 78 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் படிப்பறிவு உள்ளவர்கள்.