2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு

2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல் முறியடிப்பு
Updated on
1 min read

காஷ்மீரில் நேற்று நடந்த என் கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் காஷ்மீரில் நடக்கவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள அமார்கர் பகுதியில் சோபூர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக தீவிரவாதிகள் பிடிக்கும் ஆபரேஷனை தொடங்கினர். அமார்கர் பகுதியை வீரர்கள், போலீஸார் சுற்றிவளைத்தனர். ஒவ்வொரு வீடாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தில் சென்ற 2 பேரை மடக்கினர்.

அப்போது பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வீசினர். மேலும், சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்குப் பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த உள்ளூர் தீவிரவாதிகள் அசாருதீன் (எ) காஸி உமர், சாஜத் அகமது (எ) பாபர் என்று தெரிய வந்துள்ளது. இவர்களில் அசாருதீன் பேராசிரியராகப் பணியாற்றியவர். அரசு வேலையை துறந்துவிட்டு தீவிரவாதத்தில் சேர்ந்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டதில் போலீஸ் கண்காணிப்பாளர் (ஆபரேஷன்) ஷப்கத் உசைன், சப் இன்ஸ்பெக்டர் முகமது முர்தாசா ஆகிய 2 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

தீவிரவாதிகள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து ஏகே துப்பாக் கிகள், பிஸ்டல், கையெறி குண்டு கள் மற்றும் வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டதால், சோபூர் பகுதியில் நடக்கவிருந்த மிகப்பெரிய தாக்குதல் முறியடிக் கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in