

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் மர்ரிபாகு மண்டலம் கதிரி நாயுடு வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸார் மற்றும் வனத்துறையினர் கூட்டாக வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இவர்களைப் பார்த்து தப்பியோட முயன்ற 25 கூலித் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதில் தப்பிக்க முயன்றபோது அடிபட்டதில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைதான அனைவரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களிடமிருந்து 28 செம்மரக் கட்டைகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.