போலீஸ் மீது அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள்

போலீஸ் மீது அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள்
Updated on
1 min read

மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக போலீஸ் அதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2012- ஆம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை கடந்த 2011-ஆம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன.

205 வழக்குகளில், வெறும் 19 போலீஸ் அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

தலைநகர புது டெல்லியிலும் (75), அசாம் மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

போலி என்கவுண்டர், தீவிரவாதிகளை சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in