

டெல்லி கிரிக்கெட் சங்க விவ காரத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது, கட்சி கட்டுப் பாட்டை முன்வைத்து அருண் ஜேட்லி தப்பிக்கமுடியாது என்று பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்பி கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார்.
கட்சி மேலிடம் அனுப்பிய நோட்டீஸுக்கு ஆசாத் நேற்று விளக்கம் அளித்தார். இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் புரையோடியுள்ள ஊழல் விவ காரத்தை கடந்த 9 ஆண்டுகளாக எழுப்பி வருகிறேன். இந்த விவகாரத்தை தோண்ட வேண்டாம் என்று பாஜக எப்போதும் சொன்னது கிடையாது.
இந்நிலையில் கட்சி மேலிடம் என் மீது நடவடிக்கை எடுக்க முனைவது ஆட்சேபத்துக்குரிய தாகும். டெல்லி கிரிக்கெட் சங்கத் தின் தலைவராக ஜேட்லியை கட்சி நியமிக்கவில்லை. கட்சி செயல் பாடுகளுக்கும் கிரிக்கெட்டுக்கும் தொடர்பு கிடையாது என்பதுதான் பாஜக தலைவர்களாக முன்பு செயல்பட்டவர்களின் நிலைப் பாடும் ஆகும். டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரத்தில் ஜேட்லிதான் பொறுப்பேற்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி என்னை அழைத்துப் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பொதுச் செயலர் ராம் லாலிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித் துள்ளேன். கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான ஆவணங் களை கொடுக்கத் தயாராக இருப்பதாக அமித் ஷாவிடம் தெரிவித்துள்ளேன்.
டெல்லி கிரிக்கெட்சங்க விவகாரத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தம் கிடையாது, கட்சி கட்டுப்பாட்டை முன்வைத்து அருண் ஜேட்லி தப்பிக்கமுடியாது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.