

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பறந்த பாகிஸ்தான் பயணிகள் விமானத்தால் பீதி ஏற்பட்டது.
அர்னியா பகுதி அருகே சிறிய ரக பயணிகள் விமானம் பறந்தது.
இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சர்வதேச எல்லைக்கு மிக அருகில் மதியம் 1.50 மணிக்கு சிறிய ரக பயணிகள் விமானம் பறந்ததை எல்லை பாதுகாப்புப் படையினர் பார்த்துள்ளனர். அது வான்எல்லை மீறலாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். எனினும் கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம். சில சமயங்களில் தவறுதலாக இதுபோன்று நேர் வது உண்டு” என அவர் தெரிவித்தார்.