

புதுடெல்லி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முகுல் ரோத்கி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் உள்ளிட்ட சட்ட அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், “அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களான பிங்கி ஆனந்த், மணிந்தர் சிங், பி.எஸ்.பட்வாலியா, துஷார் மேத்தா மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோருக்கு மத்திய அமைச் சரவையின் நியமனக் குழு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இவர்கள் இந்தப் பதவியில் நீடிப்பார்கள்” என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதும் 2014 ஜூன் மாதம் முகுல் ரோத்கி அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடியவிருந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
-