

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இருவர் நேற்று கொல்லப்பட்டனர்.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோப்போரில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் தப்பிச் செல்வதற்காக பாதுகாப்பு படையினரை நோக்கிச் சுட்டனர். இதையடுத்து ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் பட்டான் நகரைச் சேர்ந்த பாசித் அகமது மீர், பிராட் சோப்போரைச் சேர்ந்த குல்சார் அகமது என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் என்றும் தெரியவந்துள்ளது.