

சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக பாஜக கோரியாதை அடுத்து சிவசேனா தலைவர்கள் புது டெல்லி விரைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநில இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டு வர பாஜக, வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நேற்று இரவு சிவசேனாக் கட்சித் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
சிவசேனா கட்சி தங்களது எம்.பி. அனில் தேசாய், மூத்த தலைவர் சுபாஷ் தேசாய் ஆகியோரை பாஜக-வுடன் பேச்சு வார்த்தைகளுக்காக நியமித்துள்ளது.
இருப்பினும், தீபாவளிப் பண்டிகை முடிந்த பிறகே மகாராஷ்டிரத்தில் பாஜக-வுடன் கைகோர்க்கப்போவது யார் என்பது தெரியவரும்.
முன்னதாக, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறிய கட்சியினரின் ஆதரவுடன் தங்களது எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 138-ஆக உயர்ந்துள்ளது என்று பாஜக கோரியிருந்தது.
இதனையடுத்து சிவசேனா கட்சித் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்த டெல்லி விரைந்துள்ளனர்.