Published : 10 Mar 2017 04:22 PM
Last Updated : 10 Mar 2017 04:22 PM

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவேன்: வாரண்ட்டை அடுத்து நீதிபதி கர்ணன் அதிரடி

தனக்கு அவமதிப்பு நோட்டீஸ் மற்றும் வாரண்ட் பிறப்பித்த உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அமர்வை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கரணன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த சி.எஸ். கரணன், “எனக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்கள் அனுப்பிய முறையும் என்னை ஆஜர் படுத்த வாரண்ட் பிறப்பித்ததும் முன்னுதாரணமற்றது, உச்ச நீதிமன்றத்திற்கு இவ்வாறு நடந்து கொள்ள உரிமையில்லை. அவர்கள் ஏன் என்னை இப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு நான் தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவைச் சேர்ந்தவன் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது” என்றார்.

மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

62 வயதாகும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் நீதிபதிகளின், நீதித்துறையின் ஊழல்கள் குறித்து ஏற்கெனவே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதும் சுமார் 10 ஆண்டுகள் அவர் இதற்காக போராடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x