

தேசிய புலனாய்வு கழகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் அபித் கான் என்கிற பால் என்பவரது ஐஎஸ் தொடர்பு பரபரப்பாகியுள்ளது. கைதாவதை தடுக்க இவர் தேவாலயத்தை அடைக்கலமாகத் தேர்ந்தெடுத்ததும் தெரியவந்தது.
அபித் கான் என்கிற இந்த நபர் இந்தியா, இலங்கையில் ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கைகளின் ஏஜெண்டாகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இவர் மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள்:
24 வயது அபித் கான் பெங்களூருவில் ஒரு சிறிய டெய்லர் அவ்வளவே. ஐஎஸ் உடன் இணையும் முன்பு ஹிஸ்ப்-உத்-தாஹிர் என்ற பிரிட்டனைச் சேர்ந்த சில தெற்காசியாவில் நடத்தி வரும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பில் இருந்துள்ளார். இது இந்தியாவில் அதிகம்பேருக்கு தெரியாவிட்டாலும் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டதே.
பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய அபித் கான் சிரியா சென்று ஐஎஸ் பற்றி கூறப்படுவதெல்லாம் உண்மைதானா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் ஐஎஸ் அமைப்பின் பிரிவை உருவாக்க முயற்சி செய்யும் ஜுனூத் உல் கலீபா ஹிந்த் என்ற அமைப்புடன் தொடர்பிலிருந்துள்ளார். ஆனால் சிரியா செல்ல விரும்புவதாகவும், ‘இந்தியாவில் எந்த பிரச்சினையும் செய்ய விரும்பவில்லை’என்றும் கூறியுள்ளார்.
த இந்து (ஆங்கிலம்) அபித் கான் வசித்த பெங்களூரு விட்டுக்குச் சென்ற போது அது பூட்டியிருந்தது, அக்கம்பக்கத்தினர் அபித் கான் அதிகம் வெளிஉலகுடன் பழகாதவர் என்றனர்.
ஜனவரி 2016-ல் இந்தியப் புலனாய்வு முகமை நாடு முழுதும் ஜூனூத் உல் கலீபா ஹிந்த் அமைப்புகள் மீது கடும் சோதனை மேற்கொண்டு 18 பேரைக் கைது செய்தது. இந்த அமைப்பு இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களை நடத்த முஸ்லிம் இளைஞர்களைத் தேர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்தக் குழு முறியடிக்கப்பட்டதையடுத்து அபித் கான் கைதாவதிலிருந்து தப்பிக்க பெங்களூரு தேவாலயத்தில் அடைக்கலாமானார். அங்கு தேவாலைய கிளர்க்கிடம் தன்னுடைய பழைய தொடர்புகளை விட்டு விடுவதாகவும் ஏசு கிறிஸ்துவின் பாதையில் பயணிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய தாடியை ட்ரிம் செய்து, தன் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டார். தனக்கு முஸ்லிம் தீவிரவாத குழுக்களிடமிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தேவாயலத்திறு வருவோர் போவோரிடம் இவர் தெரிவித்துள்ளார். இவர் தனக்கு சர்ச் ஞானஸ்னானம் செய்து அயல்நாட்டுக்கு அனுப்பும் என்று நினைத்திருந்தார். மேலும் இவர் தேவாலய நிர்வாகத்தினரிடம், தான் ஒரு பெரிய கனவு கண்டதாகவும் அதன்படி முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் மிகப்பெரிய கிறித்துவ தேவாலயத்தை தான் கட்டுவதாகவும் புருடா விட்டுள்ளார். மேலும் இந்தோனேசியாவில் தனக்கு ஒரு பெண் ஸ்னேகிதி இருப்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேவாலயம் இவரை கிறித்துவத்தை முழுதும் கற்க இலங்கைக்கு அனுப்பியது. கடந்த மார்ச்சில் இவர் இலங்கைக்குச் சென்றார். இலங்கையில் கற்றல் முடிந்தவுடன் இமாச்சலில் உள்ள குல்லு என்ற இடத்திற்கு மேலும் கிறித்துவம் பற்றி கற்க அனுப்பப்பட்டார். இங்கும் கற்றல் முடிந்தவுடன் பெங்களூரு செல்ல அறிவுறுத்தப்பட்டார், ஆனால் இவர் இமாச்சலத்திலேயே தங்க விரும்புவதாகத் தெரிவித்தார். இவர் மொபைலில் தன் சகோதரருடன் தொடர்பு கொண்டார், அப்போது அவர், அபித் கானைத் தேடி சிலர் வந்ததாகத் தெரிவிக்கவும் இனி ஊர்பக்கம் செல்வதில்லை என்று முடிவெடுத்தார். இந்நிலையில் டிசம்பரில் இமாச்சலப் பிரதேசத்தில் அபித் கான் கைது செய்யப்பட்டார்.
ஜாகிர் நாயக் வீடியோக்களையும் அவர் பார்த்ததாக விசாரணையில் தெரிவித்தார்.