

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு பதில் கடந்த நிதியாண்டில் (2015-16) சராசரியாக 49 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம் கிருபால் யாதவ் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: இத்திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் குறைந்த அளவாக மணிப்பூரில் 16 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் 17 நாட்களும், கோவாவில் 18 நாட்களும், லட்சத்தீவில் 22 நாட்களும் வேலை வழங்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப வேலை, பதில் சொல்லும் பொறுப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் நடைமுறைகளை உருவாக்குவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.