Last Updated : 11 Apr, 2017 10:08 AM

 

Published : 11 Apr 2017 10:08 AM
Last Updated : 11 Apr 2017 10:08 AM

கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம்: ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு - நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்

ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வரும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் 2019-ம் ஆண்டுக்குள் பயிற்சி பெறுவதற்காக கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 2010, ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றுவோர், ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2015, மார்ச் 31-ம் தேதிக்குள் அவர்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்குமாறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன.

இதையடுத்து வரும் 2019 வரை காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக ‘குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (திருத்த) மசோதா 2017’ என்ற புதிய மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வகை செய்யும் ஷரத்தை புகுத்தவும் இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப் பதற்கான நிதி, சர்வ சிக்்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக பங்கீட்டு வழங்கும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x