ராஞ்சி அருகே 6 சடலங்கள் கண்டெடுப்பு

ராஞ்சி அருகே 6 சடலங்கள் கண்டெடுப்பு
Updated on
1 min read

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் புறநகர் பகுதியில் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட 6 பேரின் சடலங்கள் கண்டெடுக் கப்பட்டன.

ராஞ்சி அருகே காகரா வனப்பகுதியில் இருந்து கடந்த திங்கள்கிழமை 2 சகோதரர்கள் உட்பட 3 இளைஞர்களின் சடலங் கள் கண்டெடுக்கப்பட்டன. அவர் களை தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பான இந்திய மக்கள் சுதந்திர முன்னணியை (பிஎல்எஃப்ஐ) சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

ராஞ்சியின் புறநகர் பகுதியில் இருந்து மேலும் 6 சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன. துப்பாக்கியால் சுட்டு அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலையிலும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

-ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in