காஷ்மீரை கைப்பற்றுவேன்: பிலாவல் மீண்டும் சர்ச்சை பேச்சு

காஷ்மீரை கைப்பற்றுவேன்: பிலாவல் மீண்டும் சர்ச்சை பேச்சு
Updated on
1 min read

இந்தியாவிடமிருந்து காஷ்மீரை முழுவதுமாக கைப்பற்றுவேன் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ இரண்டாவது முறையாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமாராக இரண்டு முறை பதவி வகித்து கடந்த 2007-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவால் புட்டோ சமீபத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இளம் தலைவராக பொறுப்பேற்றார்.

தந்தை ஆசிப் அலி சர்தாரியை அடுத்து அந்த கட்சியை தற்போது இவரே முன்னின்றி நடத்தி வருகிறார். அடுத்த தேர்தலில் இவரே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அன்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் முதன் முறையாக பிலாவால் புட்டோ பேசினார்.

பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் கல்லறை அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக் கூட்டத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தனர்.

அப்போது அவர் பேசும்போது, " நான் எப்போது காஷ்மீர் குறித்து பேசினாலும் இந்திய மக்கள் கதறுகின்றனர். நான் காஷ்மீர் குறித்து பேசினார் இந்தியர்களால் பதில் பேச முடியாது. இது அவர்களுக்கு நன்றாக தெரியும். இந்தியாவிடமிருந்து காஷ்மீரை கைப்பற்றுவேன். இது நிச்சயம் நடக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்" என்றார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாதில் வெள்ளப் பெருக்கு சேதத்தை பார்வையிட்ட பின்னும் இதே போல சர்ச்சையான வகையில் பிலாவால் பேசினார். காஷ்மீரின் ஒரு அங்குலத்தைக்கூட விடாமல் இந்தியாவிடமிருந்து கைப்பற்றபோவதாக அவர் கூறியது நினைவிருக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in