

இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில், அமெரிக்கா கெடுபிடிகளை தளர்த்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், அமெரிக்க தூதரக அதிகரிகளுக்கு இந்திய புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 16 முதல் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரங்களில் வர்த்தக நடவடிக்கைகைளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாகன விதிமுறை மீறலில் அமெரிக்க தூதர்களின் வாகனங்கள் இனி பிடிபட்டால் நிச்சயமாக அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விசா மோசடி வழக்கில் குற்றச் சாட்டு பதிவு செய்வதற்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடே சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த நாட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் பிரீத் பகாரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.