‘ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஆமாம் போடாதீர்கள்’ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை

‘ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஆமாம் போடாதீர்கள்’ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை
Updated on
1 min read

ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந் திருக்கும் அரசியல்வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதை தட்டிக் கேட்கத் தயங்கக்கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

குடிமைப் பணிகள் தினத்தை யொட்டி டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

குடிமைப்பணி அதிகாரிகள் நடுநிலைமையுடன் கடமை ஆற்ற வேண்டும். முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தவறான உத்தரவு போட்டால் சட்ட திட்டத்தை எடுத்துக்காட்டும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். அரசுக்கு தலைமை வகிக்கும் அரசியல்வாதிகள் தவறாக செய்யச்சொன்னால் அது சட்டவிதிகளுக்கு புறம் பானது என்பதை எடுத்துச் சொல்லுங்கள். ஆவணங்களில் கையெழுத்திடாதீர்கள்.

கடமை உள்ளது

சமூகத்தில் மாற்றம் ஏற்பட சிறப்பான பங்களிப்பு வழங்கு பவர்கள் அதிகாரிகள்தான். ஆட்சி நிர்வாக பணி அதிகாரமிக்க பணி. அதேவேளையில் அந்த அதிகாரம் மிகப்பெரிய பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆட்சி நிர்வாக பணியில் உள்ளவர்கள் கடமை ஆற்றும்போது நடுநிலைமை தவறக்கூடாது. இதுவும் இந்த பணியின் மிக முக்கிய அம்சம். நடுநிலைமை தவறும்போது முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும்.

சில அதிகாரிகள் முடிவு எடுக்காமல் ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த தயக்க நிலைமையால் நாட்டின் நலனுக்கு தீங்கு ஏற்படும்.

தேவைப்பட்டால் மூத்த அதிகாரிகளுடன் விவா தித்து தெளிவுபெற்று விடை காணுங்கள். முடிவு எடுப்பதில் எந்தவித தயக்கமும் இருக்கக்கூடாது. இந்திய ஆட்சி அமைப்பில் வெற்றிட நிலை எப்போதும் ஏற்பட்டதில்லை. இதற்கு ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் பொறுப்புணர்வே காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in