

சிங்குர் விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பின் ஒவ்வொரு வரி யையும் நடைமுறைப்படுத்து வோம். நில அளவைப் பணிகள் இரண்டு வாரங்களில் முடியும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்குரில் நானோ கார் தொழிற்சாலைக்காக 2006-ம் ஆண்டு 997.11 ஏக்கர் விவ சாய நிலத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
2011-ம் ஆண்டு திரிணமூல் ஆட்சியைக் கைப்பற்றியதும், நிலத்தை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைப்பதற்கான சட்டத்தை இயற்றியது. இதுதொடர்பான வழக்கில் அரசுக்கு சாதகமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டு வழக்கில், இந்த நிலத்தை 12 வாரங்களில் மீண்டும் விவசாயிகளிடம் திரும்ப கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித் துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. அனைத்து விவசாயிகளும் தங்களின் நிலத்தைத் திரும்பப் பெறுவார்கள். மிக விரைவில் தீர்ப் பைச் செயல்படுத்தி நீதிமன்றத் துக்கு மரியாதை செய்வோம். நில அளவைப் பணிகள் நாளை தொடங் கப்பட்டு, 2 வாரங்களில் முடிக் கப்படும். கள ஆய்வு 4 வாரங் களில் முடிக்கப்பட்டு விவசாயி களிடம் நிலம் ஒப்படைக்கப்படும்.
நில அளவைப் பணியின்போது குறைந்தது ஒரு அமைச்சர் அந்த இடத்தில் இருப்பார். யார் யாரிடம் இருந்து நிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டதோ, அதேசமயம் அவர்கள் இழப்பீட்டை ஏற்க மறுத் தார்களோ அவர்களுக்குப் பணமும் நிலமும் திருப்பி வழங்கப்படும். இழப்பீட்டை வாங்கிக் கொண்டு நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு நிலம் திருப்பி அளிக்கப்படும்.
குத்தகைதாரர்களும் தங்களது உரிமையைப் பெறுவர். இது நீதி மன்ற உத்தரவில் இல்லாதபோதும் மாநில அரசு இதனை மேற்கொள் கிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.
தொழிற்சாலை அமைப்பதற்காக கான்கிரீட் அமைக்கப்பட்ட பகுதி களை மீண்டும் சாகுபடிக்கு ஏற்ற வகையில் திருத்திக் கொடுக்கும் பொறுப்பை அரசே ஏற்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேலை நிறுத்தம் நடக்காது
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார்மய மாக்கக் கூடாது; ஓய்வூதியத் திட்டத் தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலி யுறுத்தி பல மத்திய தொழிற்சங்கள் இணைந்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதுதொடர்பாக மம்தா ட்விட்ட ரில், “செப்டம்பர் 2-ம் தேதி வங் காளம் முடங்கிவிடாது. அன்றைய தினம் அனைத்து கல்வி நிறுவனங் கள், கடைகள், நிறுவனங்கள், அலு வலகங்கள், தொழிற்சாலைகள் வழக்கம்போல் செயல்படும். வாகனப் போக்குவரத்து இயல்பாக இருக்கும். பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படாது. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், “விஷமிகளால் கடை கள், வாகனங்கள், நிறுவனங் களுக்குச் சேதம் விளைவிக்கப் பட்டால், அதற்கான இழப்பீடு வழங்கப்படும்” எனவும் பதிவிட் டுள்ளார்.