

பொதுஇடத்தில் எருதை பலி கொடுத்து அதன் தலையை மட்டும் எடுத்துக் கொண்டு ஊர்வலம் சென்றதற்காக கேரள மாநிலம் இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த மூன்று பேரை கட்சித் தலைமை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் கேரள இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ரிஜில் மகுட்டி அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து மக்கள் கூடியிருந்த இடத்தில் பலர் பார்க்கும்வகையில் எருது ஒன்றை பலியிட்டார். பின்னர் அதன் தலையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்.
இந்த சம்பவத்துக்கு தேசிய அளவில் பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை காங்கிரஸூம் நானும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், பொதுஇடத்தில் எருதை பலி கொடுத்த இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த ரிஜில் மக்குட்டி, ஜோஷி கண்டத்தில், ஷராஃபுதீன் ஆகிய மூன்று பேரை கட்சியில் இருந்து இடைநீக்க செய்து காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது.
இவர்கள் மூவர் மீதும் கண்ணூர் காவல்துறையினர் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.