

கர்நாடக முன்னாள் முதல்வர் குண்டுராவின் மகனான தினேஷ் குண்டுராவ், கடந்த சட்டப்பேரவை தேர்தலில், பெங்களூருவில் உள்ள காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற் றார். இதையடுத்து சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை யில் உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சராக கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தினேஷ் குண்டுராவ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அவரது ஆதரவாளர்கள் பெங்க ளூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். நேற்று காலை ரேஸ் கோர்ஸ் சாலை சதுக்கத் தில் சித்தராமையாவின் உருவப் படத்தை கொளுத்தினர்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ள பரமேஷ்வரின் பதவி காலம் கடந்த அக்டோபருடன் முடிவடைந்தது. இதையடுத்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக தினேஷ் குண்டுராவ் உடனடியாக நியமிக்கப் படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.
தினேஷ் குண்டுராவை சமாதா னப்படுத்தவே சோனியா இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப் படுகிறது. இதனிடையே காங்கிரஸ் மாநில தலைவர் பதவியை பெரிதும் எதிர்ப்பார்த்த அமைச்சர்கள் டி.கே. சிவக்குமார், தேஷ் பாண்டே, முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச். முனியப்பா ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.