

ஆந்திர மாநிலத்தில் இன்டர் மீடியட் (பிளஸ் 2) தேர்வுகள் முடி வடைந்தன. இந்நிலையில் விசாகப் பட்டினத்தைச் சேர்ந்த அம்ருதா, கல்யாண், ராஜேஷ், அனில் ஆகிய 4 மாணவர்களும் தேர்வு முடிந்த பிறகு, கடற்கரைக்கு சென்றனர். கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கினர்.
அருகில் இருந்தவர்கள் தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை யினர் விரைந்து வந்து மாணவர் களைத் தேடினர். சிறிது நேரத்தில் அம்ருதா மற்றும் கல்யாண் ஆகியோரின் சடலங்கள் கரை ஒதுங் கின. பின்னர் ராஜேஷும், அனிலும் தீயணைப்பு படையினரால் உயி ருடன் மீட்கப்பட்டனர்.