இன்று டெல்லி சபாநாயகர் தேர்தல் ஆம் ஆத்மி, பாஜக இடையே போட்டி

இன்று டெல்லி சபாநாயகர் தேர்தல் ஆம் ஆத்மி, பாஜக இடையே போட்டி
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இப்பதவிக்கு ஆம் ஆத்மி, பாஜக இடையே போட்டி நிலவுகிறது. இக்கட்சிகள் சார்பில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எஸ்.தீர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேந்தெடுக்கப்பட்டவர்.

பாஜக சார்பில் இப்பத விக்கு முன்னாள் அமைச்சரும், அவையின் மூத்த உறுப்பினரு மான ஜெக்தீஷ் முகி மனு செய்துள்ளார். இவரை தற்காலிக அவைத் தலைவராக, டெல்லி துணைநிலை ஆளுநர் நியமித்தபோது அதை ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் மத்தீன் அகமது இடைக்கால அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

டெல்லி தேர்தலில் முதலிடம் பெற்றும் எதிர்கட்சியில் அமர விரும்பிய பாஜக, பேரவைத் தலைவர் பதவியை பெறுவதில் குறியாக உள்ளது. தற்போது, ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் வேட்பாளர் தீருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் உள்ளனர். பேரவைத் தலைவர் தேர்தலில் இக்கட்சி வேட்பாளர் வெற்றிபெற 8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவு தேவை. சட்டமன்றத்தில் பாஜக வுக்கு 31 எம்எல்ஏக்களும், அதன் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in