Published : 15 Oct 2013 09:37 PM
Last Updated : 15 Oct 2013 09:37 PM

மோடி பிரதமராக ஆதரிக்க மாட்டேன்: நவீன் பட்நாயக்

பாஜகவின் நரேந்திர மோடி பிரதமராவதற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று பிஜு ஜனதா தளத் தலைவரும், ஒடிசா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

இது குறித்து ஐபிஎன்7 தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதை, என்னைப் போலவே பலரும் விரும்பவில்லை. நான் ஏன் விரும்பவில்லை என்பது உங்களுக்கே (பத்திரிகையாளர்கள்) தெரியும். மோடி பிரதமராவதற்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப்பீர்களா எனக் கேட்டபோது, “காங்கிரஸ், பாஜக ஆகிய இருகட்சிகளிடமிருந்தும் சம அளவில் விலகியிருக்கவே விரும்பிகிறேன்” என்றார் பட்நாயக்.

பிரதமராக நீங்கள் முயற்சிப்பீர்களா என்று கேட்டபோது, “ஒடிசாவில் நான் ஆற்றிவரும் பணியே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிலளித்தார்.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இதற்கு முன்பு பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அவர் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரின் இந்தப் பேட்டி, அந்த எதிர்பார்ப்பை தகர்த்துவிட்டது.

சமீபத்தில் பாஜகவின் ஒடிசா மாநிலப் பிரிவைச் சேர்ந்த தலைவர்கள், மக்களவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் எவ்வாறு (எந்த அணியில் இடம்பெறப் போகிறது) எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் நவீன் பட்நாயக் இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x