

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளி களின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது குறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:
சட்டத்தில் மரண தண்டனை இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிப்பது திருப்தி அளிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி. நாட்டில் சட்டப்படி ஆட்சி நடக்கிறது என்பதற்கு இந்த நாள் மிக பெரிய நாளாக அமைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிய ஒட்டுமொத்த நாட்டு மக்கள் கோபத்துடனும் பதற்றத்துடனும் காத்திருந்தனர்.
துணிச்சலான பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. இது மிகப்பெரிய அவமானம், கொடூரம். நிர்பயாவின் ஆத்மா சாந்தியடைய மனமுருக பிரார்த்திக்கிறேன். சட்டத்தின் துணை கொண்டு இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும், என்பதை இந்த வழக்கின் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.