

மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் அவசியம் என்று தலைமை தேர்தல் ஆணை யர் நஸீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
ஏழாவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தேர்தல் ஆணையம் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவர் கூறியதாவது:
மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால் அதை செயல்படுத்திட 2 நிபந் தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
அரசியல் பொதுக்கருத்து மூலமாக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது முதல் நிபந்தனை. அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் போன்ற கூடுதல் ஆதாரங்களை ஏற்படுத்து வது இரண்டாவது நிபந்தனை.
இந்த கருத்தரங்கின் மையப் பொருளே 18 வயது நிரம்பிய முதன்முறை வாக்காளர்களும் 15-17 வயது பிரிவில் உள்ள வருங்கால வாக்காளர்களும் ஆகும். தேர்தலில் பங்கேற்பதின் அவசியம் பற்றி இவர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இவர்களை ஈர்க்க என்ன செய்வது என்பது பற்றிய வழிமுறைகள் பற்றி தேர்தல் சார்ந்த அமைப்புகள் விவாதிக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கருத்தரங்கில் ஆஸ்திரேலியா, போஸ்னியா- நேபாளம் ஆகிய நாடுகளின் தேர்தல் ஆணையங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கடந்த ஆண்டில் மககளவைக் கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய அரசின் யோசனைக்கு ஆதரவு தெரிவித்த தேர்தல் ஆணையம் இதற்கு அதிக செலவாகும் என்று தெரிவித்தது. மேலும் சில சட்டப்பேரவைகளின் ஆயுளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டி இருக்கு்ம என தெரிவித்தது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கை பற்றி தனது கருத்துகளைத் தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
அதன்படி மே மாதம் சட்ட அமைச்சகத்துக்கு பதில் அளித்த ஆணையம்.இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மக் களவைக்கும் சட்டப்பேரவை களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட ரூ. 9000 கோடிக்கு மேல் ஆகும் என தெரிவித்தது.