

நாட்டில் முதல்முறையாக ஒடிசா மாநிலத்தில் கால்நடைகளுக்காக ரத்த வங்கி தொடங்கப்பட உள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஸ் வரத்தில் ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. அந்த பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேந்திரநாத் பசுபலாக் கூறியதாவது:
நாட்டில் முதல்முறையாக ஒடிசா வேளாண் பல்கலைக் கழகத்தில் ரூ.3.25 கோடியில் கால்நடைகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட உள்ளது. இதற்கு தேசிய வேளாண் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீத பங்களிப்புடன் இந்த ரத்த வங்கி தொடங்கப்படும்.
விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு வங்கிகளில் சேமித்து வைக்கப்படும். மேலும் இதர மையங்களுக்குச் சென்றும் கால் நடைகளின் ரத்தம் சேகரிக்கப்படும்.
குட்டி ஈனும்போதும் விபத்து களில் சிக்கும்போதும் பாதிக் கப்படும் கால்நடைகளுக்கு எங்கள் ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வழங்கப்படும். இதன்மூலம் கால்நடைகளின் உயிரிழப்பு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.