

சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டம், பசகுடா காவல் எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் நக்சலைட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதி காலை பாதுகாப்பு படையினர் நக்சலைட்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையினர் கை ஓங்கியதால் நக்சலைட்கள் அங் கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்தி லிருந்து நக்சலைட் ஒருவரின் உடலைப் பாதுகாப்பு படையினர் மீட்டனர். மேலும் துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் நக்ஸல் தொடர்பான பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர்.
மோதலில் இறந்தவரை அடையாளம் காணும் பணி நடந்துவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.