மாநிலங்களவைக்கு கார் இல்லாத கோடீஸ்வரர்கள்

மாநிலங்களவைக்கு கார் இல்லாத கோடீஸ்வரர்கள்
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் முன்னி றுத்தப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் அனில்தாவே மற்றும் பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர் ஆகியோர் தங்களுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், தன்னுடைய பெயரி லும் மனைவியின் பெயரிலும், ரூ.44 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக அக்பர் (65) வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அனில்தாவே(59) தன்னுடைய சொத்து மதிப்பு, ரூ.60.9 லட்சம் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

இவர்களுக்கு மாறாக, காங் கிரஸ் வேட்பாளரான விவேக் தான்கா, தன்னிடம் ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ உட்பட 5 கார்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய ஆண்டு வருமானம், ரூ.15 கோடி என்றும், சொத்து மதிப்பு, ரூ.62 கோடி என்றும் வேட்புமனுவில் விவேக் தெரிவித்திருக்கிறார்.

‘பாரதிய கரீப் பார்ட்டி’ சார்பில் போட்டியிடும் சாஷி ஸ்டெல்லா(49) தன்னிடம் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு, ரூ.6,100 மட்டுமே என, வேட்பு மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in