நவம்பர் 2.ல் மீண்டும் பிகார் செல்கிறார் மோடி

நவம்பர் 2.ல் மீண்டும் பிகார் செல்கிறார் மோடி

Published on

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி நவம்பர் 2ம் தேதி பாட்னா செல்கிறார். அங்கு கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இத்தகவலை அம்மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 27- ஆம் தேதியன்று பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற பேரணியின் போது 7 குண்டுகள் வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர், 83 பேர் காயமடைந்தனர்.

அக்.27-ல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர், மோடி பிரச்சாரத்தைத் தொடர்ந்தார் . இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது.

குறிப்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். இத்தகைய சூழலில், நரேந்திரமோடி நவம்பர் 2ம் தேதி பாட்னா செல்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in