பழங்குடியின பெண்களுடன் ராகுல் கலந்துரையாடல்

பழங்குடியின பெண்களுடன் ராகுல் கலந்துரையாடல்
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அங்கு எபனி இலை சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பழங்குடியின பெண்களிடம் கலந்து ரையாடினார். அப்போது அவர் களின் பிரச்சினைகளை பொறு மையாகக் கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடல், பழங்குடியினர் பெரும்பான்மை யாக வசிக்கும் மாண்ட்லா மாவட் டம் பட்பட்பாரா என்ற கிராமத்தில் நடந்தது. முன்னதாக எபனி இலைகள் காணப்படும் அருகில் உள்ள வனப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் கழித்தார் ராகுல். இந்த இலைகளைக் கொண்டு பீடி தயாரிக்கப்படுகிறது. இந்த இலை சேகரிக்கும் பணி இங்குள்ள மக்களுக்கு முக்கிய வாழ்வா தாரமாக உள்ளது.

அங்கிருந்த பெண்களிடம், “நான் உங்களிடம் பேசப்போவ தில்லை. உங்கள் பிரச்சினைகளை கூறுங்கள். கேட்டுக்கொள்கிறேன்” என்றார் ராகுல்.

அப்போது அனுஷ்யா என்ற பெண், “இந்த இலை சேகரிக்கும் பணி மிகவும் கடினமாக ஒன்று. இப்பணியால் குடும்பத்தையோ குழந்தைகளையோ கவனிக்க முடியவில்லை” என்றார். மற்றொரு பெண், தங்கள் கிராமத்தில் குடிநீர் கிடைக்கவில்லை என்றார்.

லமிலிபாய் என்ற பெண் கூறுகை யில், “100 நாள் வேலைத் திட்டத்தில் அரசு அறிவித்துள்ளதை விட கூலி குறைவாகத் தருகின்றனர்” என்றார். தன்னுடன் அப்பெண்கள் அச்சமின்றி பேசியதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ராகுல், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜபல் பூருக்கு சென்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சத்யதேவ் கடாரே உள்ளிட்டோர் ராகுலுடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in