Last Updated : 29 Jan, 2017 01:01 PM

 

Published : 29 Jan 2017 01:01 PM
Last Updated : 29 Jan 2017 01:01 PM

சுனந்தா மரணத்துக்கான காரணம் தெரியவில்லை: மருத்துவக் குழு அறிக்கையில் தகவல்

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா, 2014 ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்ரமமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரிக்க டெல்லி காவல் துறை சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

சுனந்தாவின் பிரேதப் பரி சோதனை அறிக்கையை எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கியது. மேலும் சுனந்தாவின் உடல் உறுப்புகள் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கும் (எப்பிஐ) அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கை பெறப் பட்டது. இவற்றை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித் துள்ளது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒரு மாதத்துக்கு முன்பு மருத்துவக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் சுனந்தா மரணத் துக்கு காரணம் என்ன என்று எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு அக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என கூறி உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x