

டெல்லி காற்று மாசு தொடர்பான பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் லாகுர், பி.சி.பாண்ட் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
காற்று மாசு மிக மோசமான பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று பேசிக் கொண் டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும். அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
வாகனங்களின் காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப் படுகிறது. அந்த நேரத்தில் வாகனங்களுக்கு புகை மாசு சான்றிதழும் பெறுவதை கட்டாய மாக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆலோசனை தெரிவித்தார்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறியபோது, ஓராண்டு காலம் என்பது மிக அதிகபட்சம். காற்று மாசு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.