ஆந்திரா தலைமை செயலகத்தில் கழிப்பறை பற்றாக்குறை

ஆந்திரா தலைமை செயலகத்தில் கழிப்பறை பற்றாக்குறை
Updated on: 
1 min read

ஆந்திராவின் அமராவதியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் கழிப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்ட வேண்டும் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவின் அமராவதி நகரில் அமைந்துள்ள புதிய தலைமை செயலகத்தில் போதிய அளவுக்கு கழிப்பறை கள் கட்டப்பட்டவில்லை. மொத்தம் 26 அமைச்சர்கள் உள்ள நிலையில் 19 அமைச்சர்களின் அலுவலகத்தில் மட்டுமே கழிப்பறைகள் உள்ளன.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நராராயணாவிடம் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போதிய கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in