Last Updated : 08 Jun, 2016 09:24 AM

 

Published : 08 Jun 2016 09:24 AM
Last Updated : 08 Jun 2016 09:24 AM

விலை உயர்வைக் கட்டுப்படுத்த 13 ஆயிரம் டன் பருப்பு இறக்குமதி

உணவு தானிய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு 13 ஆயிரம் டன் பருப்பு ரகங்களை இறக்குமதி செய்துள்ளது. அடுத்த சில வாரங்களில் மேலும் 6,000 டன் பருப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துவரம் பருப்பு 11 ஆயிரம் டன்னும், உளுந்து 2,000 டன்னும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒப்பந்தப்படியான 38,500 டன் பருப்பு இறக்குமதி தவிர, மத்திய அரசு காரிப் பரு வத்தில் 51 ஆயிரம் டன் பருப்பும், ராபி பருவத்தில் இதுவரை 60 ஆயிரம் டன் பருப்பும் உள்நாட்டு சந்தையில் கொள்முதல் செய்துள் ளது. விலை உயர்வைத் தடுப்பதற் காக அத்தியாவசிய இருப்பிலிருந்து பருப்பு வகைகளை மாநில அரசு கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதனை கிலோ ரூ.120-க்கும் அதிக மாக விற்பனை செய்யக் கூடாது. டெல்லியில் கேந்திரிய பந்தர் அண்ட் சபல் அமைப்பின் கிளைகள் மூலம் விநியோகிக்க பருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 635.31 குவிண்டால் துவரம்பருப்பும், 245 குவிண்டால் உளுந்து பருப்பும் கிலோ தலா ரூ.120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், தெலங் கானா மாநிலங்கள் கோரிய அளவு பருப்பு ஒத்துகீடு செய்யப்பட் டுள்ளது. இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) 3.2 கோடி டன் கோதுமையை கொள்முதல் செய் துள்ளது. இதில், பொதுவிநியோகத் திட்டத்துக்கான தேவை 2.4 கோடி டன்னாக உள்ளது.

நடப்பு நிதியாண்டில் வெளிச் சந்தையில் 62.5 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்வதற் காக ஒப்புதல் அளித்துள்ளது. இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x