

தேர்தலில் தவறானவர்களுக்கு ஏன் மக்கள் வாக்களிக்கிறார்கள் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் பத்திரிகை ஒன்றின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில், அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் ஏன் கறை படிந்த வேட்பாளர்களை நிறுத்துகின்றன என ஜெட்லியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜெட்லி,அரசியல் கட்சிகள் சரியான தலைவர்களை தேர்தலில் முன்னிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்ததோடு, மக்கள் ஏன் கறை படிந்தவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், எதிர்க்கட்சிகள் சிறிய பிரச்சினைகளுக்கு கூட நாடாளுமன்றத்தை முடக்குவதாகவும், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம் சாடினார்.
இதற்கு பதிலளித்த ஜெட்லி, மத்திய அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றார்.