

கல்வி உதவித் தொகை மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை ஆகியவற்றுக்கு ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
“பல்கலைக்கழக மானியக் குழுவின் கல்வி உதவித் தொகை அல்லது ஆய்வு உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, ஆதார் எண்ணையும் இணைத்து விண்ணப்பிக்க வேண் டும். ஆதார் எண், இந்த சலுகை களைப் பெறும் பயனாளிகளை அடையாளம் காணும் கருவியாக பயன்படுத்தப்படும்” என யுஜிசி அறிவித்துள்ளது.
2017-18-ம் ஆண்டுக்கு உதவித் தொகை கோரி ஏற்கெனவே ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள வர்கள், தங்களின் விண்ணப்பத்தை மறுபதிவு செய்யும்படி யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.